கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா!!

494

Watch

அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்து பாடசாலைக்கு எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மாணவரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் படிக்கும் முஸ்லிம் மாணவரான அகமது முகமது, சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது அதை வெடிகுண்டு எனக் கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அகமது முகமதுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஒபாமா அழைப்புவிடுத்திருந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் விண்வெளி அறிஞர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிக்கையில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட அகமது முகமது, அதிபர் ஒபாமாவுடன் கை குலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.