பிறந்த நாளில் ஓய்வை அறிவித்தார் சேவாக்!!

353

Shewag

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். துபாயில் இருந்து இன்று இந்தியா திரும்பியதும் அவர் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சேவாக். இதேபோன்று 2001-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதம், 38 அரை சதங்களுடன் 8273 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.



105 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்களுடன் 8586 ஓட்டங்களை எடுத்துள்ளார். 19 டி20 போட்டிகளில் 394 ஓட்டங்களை குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரான சேவாக் (3013), இரண்டு முறை முச்சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பல போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறாமல் இருந்த சேவாக், தனது பிறந்த நாளான இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இணைவதையொட்டி அவர் ஓய்வு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. சேவாக்கிற்கு இன்று 37-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.