சமாதான சுதந்நிர தமிழர் சகவாழ்வு சர்வதேசத்தின் பொறுப்பு : வன்னிமாவட்ட பா.உ சி.சிவமோகன்!!

733

16.10.2015 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலம் சென்ற சிவமனி செல்வராசா (ஆசிரியர் புதுக்குடியிருப்பு) அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டர். இதில் தெரிவுசெய்யப்பட்ட 89 பயனாளிகளுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டது. சி.தவசீலன் (லண்டன்) அவர்களின் அனுசரணையுடன் இடம்பெற்றது. தொடர்ந்து வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள்; உரையாற்றுகையில்.

என்றும் தமிழர்களை ஏமாற்ற வரும் அரசுகள் மட்டுமல்ல சிங்கள அரச அதிகாரிகளும் முன்நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி பெற்றுத்தர குரல் கொடுக்காத சர்வதேசம் வெறுமனே வெறும் பேப்பர் அறிக்கைகளை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை பல பசப்பு வார்த்தைகளை கூறி எமது விடுதலைப்போராட்டத்தை மழுங்கடித்த சர்வதேச நாடுகள் இன்று மௌனமாக இருப்பது உலகநீதி செத்துவிட்டது என்பதற்கு சான்றாகிறது.

உடன் எமது சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டு பயங்கரவாத சட்டங்கள் நீக்கப்பட்டு ராணுவமேலாதிக்கம் நீக்கப்பட்டு எமது மக்கள் நின்மதியாக வாழ வழிஏற்படுத்தி தரப்படுவது சர்வதேச நாடுகளின் பொறுப்பாகும் இல்லையேல் சர்வதேச நாடுகள் சமாதான பேச்சுவார்த்தை ஏன்ற போர்வையால் எமது விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்த சந்தர்ப்பம் வழங்கியிருக்ககூடாது எனவே சமாதான சுதந்திர தமிழர் சகவாழ்வு உறுதிப்படுத்துவது சர்வதேசத்தின் பொறுப்பு ஆகும் என்று தெரிவித்தார்.



DSC_9484 DSC_9490 DSC_9495 DSC_9499 DSC_9503 DSC_9512 DSC_9516 DSC_9517 DSC_9521 DSC_9525 DSC_9542 DSC_9544