சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் நியூஸ்பெஸ்ட் மற்றும் சக்தி சிரச வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கும் ”பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் நாடுதழுவிய ரீதியில் பத்து மாவட்டங்களில் இடம்பெறுகின்றது .
அவற்றில் வடமாகாணத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா அரச அதிபர் எஸ் . பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நாளை மறுதினம் 23.10.2015 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற உள்ளது.
வவுனியாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான சத்திய பிரமாணம் எடுக்கும் இந் நிகழ்வில் அனைத்து தரப்பு பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் இளைஞர் கழகங்கள் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது .