யாழில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் சிக்கினார்!!

494

corruption

அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே இவர் இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார்.



இதன்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேகபர் 6000 ரூபா இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.