காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்!!

424

Shoot

காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த கடற்படை சிப்பாய் அல்லைப்பிட்டி கஞ்சதேவ கடற்படை முகாமில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது நேற்று தனது ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.



குறித்த கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக வீரர் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.