60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இந்தியாவின் – இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.