கள்ளக்காதலனிடம் தன் மகளைக் கைவிட்டுச் சென்ற தாய்: நண்பர்களுடன் கூட்டாக துஷ்பிரயோகம்!!

479

Abuse

தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனிடம் கைவிட்டு, இன்னொருவருடன் ஓடிப் போன தாயின் செயல் காரணமாக எட்டுவயதுக் குழந்தையொன்று கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குருநாகல் கட்டுபொத்த பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டுபொத்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் சிறுமியின் குடும்பம் வசித்துள்ளது. அக்காலப்பகுதியில் சிறுமியின் தகப்பன் வேறொரு பெண்ணுடன் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் நடுத்தர வயதைக் கடந்த ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், சிறிது காலத்தின் பின் இன்னொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது முன்னைய காதலனிடம் தனது இரு பெண்குழந்தைகளையும் கைவிட்டு தாயார் தனது நண்பனுடன் வேறு பிரதேசத்துக்கு ஓடிப் போயுள்ளார்.



இந்நிலையில் எட்டு வயதான மூத்த பெண் குழந்தையை தாயின் கள்ளக் காதலன் பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளான். மேலும் தனது நண்பர்கள் மூவரையும் அழைத்து வந்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளான். இச்சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சிறுமி மற்றும் தங்கை அவர்களின் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதன்போதே அவர்களின் உறவினர்கள் சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம் குறித்து அறிய நேர்ந்துள்ளது.

இதனையடுத்து பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் கள்ளக் காதலன் மற்றும் அவனுடைய மூன்று நண்பர்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.