வவுவனியாவில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி உரையாடல் ஊடாக விசாரணை!!

711

police

வவுனியாவில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி உரையாடல் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பொலிஸ் நிலைய விசேட சுற்றி வளைப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணமாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் துரிதகதியில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.



கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வீடு செல்வதாக தெரிவித்திருந்த ஜீ.குணதிலக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தினத்தில் இரவு 11 மணி முதல் 11.45 மணி வரையில் அவர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.