வவுனியாவைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை ரீதியான இலக்கியப் போட்டிகளில் சாதனை!!

598

Ach

அகிலம் சஞ்சிகையும், கண்டி கலை இலக்கிய இரசிகர் மன்றமும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியான இலக்கியப் போட்டிகளில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஐவர் பரிசு பெற்றுள்ளனர்.

திறந்த போட்டிப் பிரிவில் கட்டுரைப்போட்டியில் யாழ் தர்மினி பத்மநாதன் முதலாம் இடத்தினையும், அனுஷா கணேசராசா மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

திறந்த பிரிவு நாடகப் பிரதியாக்கம் போட்டியில் யாழ் தர்மினி பத்மநாதன் இரண்டாம் இடத்தினையும் வவுனியா தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை கஜரதி பாண்டித்துரை ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர்.



திறந்த மட்ட கவிதைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஆ.கௌரிதாசன் மற்றும் வல்வெட்டித் துறையை சேர்ந்த சக்திவேல் கமலகாந்தன் ஆகியோர் ஆறுதல் பரிசினை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் எதிர்வரும் 24ஆம் திகதி 2 மணிக்கு கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.