பாரதிபுரம் Jolly Boys விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 21ம் திகதி பாரதிபுரம் பாரதி வித்தியாலய மைதானத்தில் மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பம்மானது.
இபோட்டியானது பாரதிபுரம் பாரதி வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.ரமேஸ்கந்தா மற்றும் Jolly Boys அணியின் முன்னாள் வீரர் அமரர் திரு.சசிகுமார் அவர்களின் ஞாபகார்த்த போட்டியாக நடாத்தப்படுகின்றது.
முதல் நாள் போட்டியில் New Sun மற்றும் MCC அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் New Sun அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் Jolly Boys மற்றும் Supper Star அணிகள் மோதின இதில் Jolly Boys அணி வெற்றி பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள 10 ற்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 8 ஓவர்கள் கொண்ட இப்போட்டியானது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கேடயமும் சிறப்பு பரிசில்களும் வழங்கப்படும்.
-கலைதேவன்-