சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் இறுதி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சிறுவர்களின் பாதுகாப்பிற்கான சத்தியப்பிரமாணம் அடங்கிய செய்தியினை மங்கள வாத்தியம் சகிதம் எடுத்துவந்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சரஸ்வதி மோகனாதனிடம் சக்தி வானொலி மற்றும் நியூஸ் பெஸ்ட் அதிகாரிகள் செல்டன் அன்டனி மற்றும் ஜெகநாத் ஆகியோர் கையளித்தனர் .
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் சர்வமத வழிபாடுகளின் பின்னர் விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதனையடுத்து “பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சிறுவர்களின் பாதுகாப்பிற்கான சத்தியப்பிரமாணம் மும்மொழிகளிலும் எடுக்கின்ற நிகழ்வு காலை 10.10 மணியளவில் இடம்பெற்றது .
தொடர்ந்து வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களது பிள்ளைகளின் மகிழ்சிக்காக விழிப்புணர்வு திட்டம் தொடர்பான உரை இடம்பெற்றது . தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது .
மேற்படி வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா மேலதிக அரச அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் சர்வ மத தலைவர்கள் அத்துடன் வவுனியா மாவட்ட பிரதேச மற்றும் செயலககங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர் .
இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவுநாள் நிகழ்வுகளையொட்டி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா .மாத்தறை, அனுராதபுரம், கேகாலை, கண்டி, காலி ஆகிய பிரதேச செயலங்களிலும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நியூஸ்பெஸ்ட், சட்டம் மற்றும் ஒழுங்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.