வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள் மன்றத்தினால் முன்னெடுக்க பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் கடந்த 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் அகத்தியர் வீதியை புனரமைக்கும் பணிகள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள் மன்றத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி வீதி புனரமைப்பு பணிகளானவை கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தேர்தல் காலங்களில் அளித்திருந்த வாகுறுதிகளுக்கமைவாக முன்னெடுக்கபட்டு வருவதாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள் மன்றத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தெரிவித்தார் .