பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் முன்னாள் காதலன்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய 20 வயதுடைய சோனியா பீபி என்ற பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதேபகுதியைச் சேர்ந்த லத்தீப் அகமது (24) என்ற வாலிபர் குறித்த யுவதி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் முறிந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் குறித்த யுவதியை சந்தித்த காதலன் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். அதற்கு சோனியா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் சோனியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.
படுகாயமைந்த சோனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் தீவைத்த காதலனை கைது செய்தனர்.