கடந்த 1971ம் ஆண்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரனுக்கு பயணம் செய்த அமெரிக்க விண்வெளி வீரர் டேவ் ஸ்காட் அணிந்து சென்ற கைக்கடிகாரம் 10½ கோடிக்கு ஏலம் போனது.
1971ம் ஆண்டு ´அப்பல்லோ 15´ என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு விண்வெளி வீரர் டேவ் ஸ்காட் கட்டளையிடக்கூடியவராக இருந்தார்.
இதன்போது அவர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புலோவா குரோனோகிராப் என்ற கைக்கடிகாரத்தை அணிந்து இருந்தார்.
சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இவர் மட்டுமே கைக்கடிகாரம் அணிந்து சென்றுள்ளார்.
அந்த கை கடிகாரம் 10½ கோடிக்கு ஏலம் போனது. இந்தக் கைக்கடிகாரத்தை புளோரிடாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார்.