வவுனியாவில் பாலித தெவரப்பெருமவிடம் சிக்கிய மற்றொரு திருட்டுச் சம்பவம்!!

390

Palitha

வவுனிய வெஹரதென பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் காணப்படும் பெறுமதிவாய்ந்த கருங்காலி, முதிரை போன்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு சென்றவேளை கருங்காலி, முதிரை போன்ற பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்ததுடன் மேலும் சில மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர முல்லைத்தீவு பன்சல்கந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் இடத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும சென்றுள்ளார்.



அவர் அங்கு சென்றவேளை மிகவும் பெறுமதியான, பழமை வாய்ந்த கருங்காலி, முதிரை போன்ற மரங்கள் வெட்டப்பட்டிருப்பதை அவரால் அவதானிக்க முடிந்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.