இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த அணுசக்தி துறை ஒருவரின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் லண்டன் மீது சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட ரஷ்யா திட்டமிட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1954ம் ஆண்டு சக்தி வாய்ந்த 4 அல்லது 5 அணு குண்டுகளை லண்டன் நகரத்தின் முக்கிய பகுதிகள் மீது போட ரஷ்யா திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா திட்டமிட்டபடி செயல்படுத்தி இருந்தால் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியில் இருந்து 3 மைல்கள் தூரம் வரை ஒட்டுமொத்தமாக 30 மைல்கள் சாம்பலாக மாறியிருக்கும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணு குண்டுகளை விட அவை சக்தி வாய்ந்தது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.