15 ஆண்டுகளுக்கு முன்பு வழித்தவறி பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண் கீதா, இன்று டெல்லி திரும்புகிறார்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற ரயிலின் ஒரு பெட்டியில் ஏறி பாகிஸ்தான் சென்ற அவர், நாகூர் ரயில் நிலையத்தில் அழுது கொண்டிருந்தார்.
அப்போது 9 வயதான சிறுமி கீதாவுக்கு பேச முடியாது. காது கேட்கும் திறனும் கிடையாது. இதனால் சிறுமியால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவரை மீட்ட அந்நாட்டு பொலிசார் அவரிடம் இருந்து எந்த தகவலும் பெற முடியாததால், கராச்சியில் உள்ள எத்தி என்ற தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில் இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் கீதாவின் உறவினர்கள், பீகாரில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று நாடு திரும்பும் சிறுமி கீதாவை வரவேற்க அவரது சொந்த கிராமம் தயாராக உள்ளது.