வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவனபவானந்தம் சண்முகநாதன் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போது கொல்லப்பட்டவர்களை இனம் கண்டு கொள்வதற்காக நாடாளுமன்ற குழு ஒன்றை தாங்கள் நியமிக்க எடுத்த முடிவை மனதார பாராட்டுகின்றேன்.
இந் நிலையில் வன்னி மாவட்டத்தை சேர்ந்த துடிப்பு மிக்க அர்ப்பணிப்புமிக்க மக்கள் நலன் சார்ந்து சிந்தித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சரவனபவானந்தம் சண்முகானந்தம் அவரது 3வயது மகன் வக்சலன் ஆகியோரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களையும் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகின்றேன் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.