பாடசாலைகளுக்கருகில் போதைவஸ்து விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கவும்!!

784

Police

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

“பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை” என்ற தொனிப் பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



குறித்த வார காலத்தில் பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலை சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மருந்துகள் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் பின்னேர வகுப்புக்களுக்கு அருகில் போதை மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பாக கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.