வவுனியாவின் பலபகுதிகளிலும் நேற்று காலை தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது .நாடு தழுவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கம் வட பகுதியிலும் நீடித்து வருகிறது .
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இன்று(2710.2015) காலை முதல் பிற்பகல் இரண்டு முப்பது மணிவரை 30 mm மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
இதே போன்று முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது .
-பிரதேச நிருபர் –