மரத்தில் விழுந்த மாணவனின் கழுத்துப் பகுதியில் புகுந்த இரும்புத் துண்டு!!

396

boy

ஹொரணை பிரதேசத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவரின் கழுத்துப் பகுதியில் கம்புத்துண்டொன்று குத்தியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழுத்துப் பகுதியில் குத்திய கம்புத்துண்டொன்று நெஞ்சுப் பகுதி வரை ஊடுருவியுள்ளது. வலியால் துடித்த மாணவன் அயலவர்களால் உடனடியாக ஹொரணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்.

எனினும் மிகவும் மோசமான காயம் ஏற்பட்ட நிலையில் இருந்த மாணவனுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லாத நிலையில் மாணவருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளார்.



மாணவன் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரமான சத்திரசிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.