வவுனியாவில் நடைபெற்ற 141ஆவது உலக அஞ்சல் தினம்!!(படங்கள்)

798

141ஆவது உலக அஞ்சல் தினம் நேற்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் அஞ்சல் மா அதிபதி டி.எல்.பி. றோகன அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பணியாளர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வுகள், கடந்த காலத்தில் அஞ்சலகத்திற்கு வருமானம் பெற்றுக் கொடுத்த ஊழியர்களுக்கான விருதுகள், சிறந்த அஞ்சல் அலுவலகங்கள் என தெரிவு செய்யப்பட்டு சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்ட ஊழியர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பிரதி அஞ்சல் மா அதிபதி நிருவாகம், பிரதம கணக்காளர் கே.பி. வசந்ததிலக வடமாகாண பிரதி அதிபாரக இருந்த வி.குமரகுரு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அத்தியட்சகர்கள், வடமாகாணத்தில் பணியாற்றும் அஞ்சலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5 6 7 8 9 10