வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்து!!(படங்கள்)

559

Acc

வவுனியா A9 வீதி புளியங்குளம் பகுதியில் நேற்று (27.10) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. A9 வீதியால் வேகமாகச் சென்ற கண்டர் ரக வாகனம் ஒன்று வீதியில் பயணித்த மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததுடன் பலத்த சேதங்களுக்கும் உள்ளானது. மேலும் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

A9 வீதியில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



1 2 3 4 5 7 8