பளையில் 5 மாணவிகள் துஷ்பிரயோகம் : ஒருவர் விளக்கமறியலில்!!

398

Abuse

பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை – உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் பாடசாலை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்த தொண்டர் ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.