இறந்த பின்னரும் வருமானம் ஈட்டும் மைக்கல் ஜக்சன்!!

474

Michal

இறந்த பிறகும் கூட தொடர்ந்து சம்பாதித்துக் கொட்டுகிறார் மறைந்த பொப் இசை மன்னன் மைக்கல் ஜக்சன். மரணமடைந்த பிரபலங்கள் வரிசையில் அதிகம் சம்பாதிப்பது மைக்கல் ஜக்சன்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மைக்கல் ஜாக்சன் 75 மில்லியன் பவுண்கள் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட 30 வருடம் பொப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மைக்கல் ஜக்சன் மொத்தமாக 7000 கோடி வரை சம்பாதித்திருந்தார்.

ஆனால் அவரது மறைவுக்குப் பின்னரும் கூட அவரது வருமானம் குறையாமல் சிறப்பாகவே உள்ளது. அவரது மறைவின் பின்னர் 2009ம் ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட 6500 கோடியை அவர் சம்பாதித்துள்ளார்.



உயிரிழந்தவர்கள் வரிசையில் மட்டுமல்லாமல் உயிருடன் உள்ள கலைஞர்களுக்கும் சரியான போட்டியாக இருக்கிறார் மைக்கல் ஜக்சன்.