வவுனியாவில் நடைபெற்ற “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும்!!(படங்கள்)

466

வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் “முத்தான வியர்வை” என்னும் தொனிப் பொருளில் தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக வவுனியாவில் இன்று (28.10) கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.

உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய ரீதியில் ‘முத்தான வியர்வை’ என்னும் வேலைத்திட்டம் நடைபெற்றுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்திலும் அந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

1 2 3 4 5