ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் படமாகவிருக்கிறது. சென்னையில் முக்கியமான காட்சிகளை பாரமவுண்ட் ஸ்டுடியோவில் படமாக்கினர்.
அப்போது, படத்தின் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக் காட்சியில் பற்றி எரியும் தீயில் சிக்கித் தவிக்கும் மக்களை ரஜினி காப்பாற்றுவதுபோல் படமாக்கியுள்ளனர்.
இந்த சண்டைக் காட்சியில் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த காட்சி மிகவும் அற்புதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக் காட்சி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.