ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார விழா பண்பாட்டு பேரவைத் தலைவரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருமான திரு.குருபரன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (27.10.2015) அன்று பிரதேச பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், வைத்தியகலாநிதி ஜெயகுலராசா, வரலாற்று ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா செல்லதுரை, முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன், கற்சிலைமடு பாடசாலை அதிபர் நாகேந்திரராசா, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி தில்லையம்பலம், இவர்களுடன் கலைஞர்கள், படைப்பாளிகள், பிரதேச செயலக பணியாளர்கள், பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான ஓய்வு பெற்ற அதிபர் தில்லையம்பலம், ஒட்டுசுட்டான் இ.த.க. அதிபர் திருமதி நித்தியகலா, ஒட்டுசுட்டான் தர்ஷன், கூழாமுறிப்பு வினாயகமூர்த்தி, கற்சிலைமடு தயாபரன் என்போர் தகைநிலை சார்ந்தவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இக் கலை விழாவில் பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.







