விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!

334


அமெ­ரிக்க எயார்லைன்ஸ் விமா­னமொன்றில் பயணம் செய்­வ­தற்கு சக்­கர வண்­டியில் அழைத்துவரப்­பட்ட மிகவும் பரு­ம­னான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்­தப்­பட்­டமை அங்கிருந்­த­வர்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது.

ஹாங் என்­ற­ழைக்­கப்­படும் மேற்­படி நாய் அதன் உரிமை­யா­ள­ரான காரி விட்மான் சகிதம் மேற்­படி விமா­னத்தின் முதல் வகுப்பில் டென்வர் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ருக்கு பயணத்தை மேற்­கொண்­டுள்­ளது. உள்­ளக வடி­வ­மைப்­பா­ள­ராக பணி­யாற்றும் காரி விட்மான், அமெரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் செயற்­பட்டு வரும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குள்­ளாகும் நாய்­களை மீட்­பதில் ஈடு­பட்டு வரும் ‘ஏக் ஒப் ஹார்ட்ஸ் டோக் ரெஸ்­கியூ’ அமைப்பின் ஸ்தாப­க­ராவார்.



உடல் பருமன் கார­ண­மாக கடும் நோய்­வாய்ப்­பட்டு நகர முடி­யாத நிலையில் இருந்த அந்த நாயை அழைத்து வரு­வ­தற்கு மெத்­தை­யா­லான மேற்­ப­ரப்பைக் கொண்ட ஆடம்­பர சக்­கரவண்டி பயன்படுத்­தப்­பட்­டி ­ருந்­தது. விமான நிலை­யத்­துக்கு அழைத்து வரப்­பட்ட அந்த நாயால் கவ­ரப்­பட்ட விமான நிலைய ஊழி­யர்கள், அத­னுடன் இணைந்து புகைப்­ப­டங்­களை எடுத்துக் கொள்­வதில் ஆர்வம் காட்­டி­யுள்­ளனர்.

மேற்­படி நாய் அந்த விமானத்தில் முதல் வகுப்பில் முதல் வரிசையில் தனது எஜமா னியின் அருகில் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ளது.



1 2 3