வவுனியா மூன்றுமுறிப்புக் குளம் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களினால் புனரமைப்பு!!

576

வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் ஓமந்தை நாவற்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட மூன்று முறிப்பு குளத்தின் மேலதிக நீர் பாய்வதற்கான வாய்க்கால் 75000 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

போரினால் அழிவடைந்திருந்த இக்குளம் 2014ம் ஆண்டில் புனரமைக்கப்பட்ட போதும் மேலதிக நீர் பாய்வதற்கான வசதிகள் செய்யப்படாத நிலையில் வெள்ளத்தினால் பல ஏக்கர் நிலங்கள் அழிவுக்குட்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து இவ்வாய்க்கால் புனரமைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணியை நிறைவேற்றுவதற்கு நீர்பாசனப் பணிமனையினர் மற்றும் இப்பிரதேச கமக்காரர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2 4 5