யானைக்கும் மக்களுக்குமிடையிலான மோதல் தொடர்பில் அறிவிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1992 என்ற இலக்கத்திற்கு அழைத்து இது குறித்து அறிவிக்கலாம்.
வனவிலங்குகள் தொடர்பான அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் பணிப்புரைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலக்கத்தின் ஊடாக மக்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதம அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து ஏற்படுத்தும் உயிரிழப்புக்கள், பொருட் சேதங்கள் அத்துடன் மனிதர்களால் யானைகளுக்கு ஏற்படும் சேதங்களையும் குறைப்பதே இதன் நோக்கமாகும்.





