நாட்டின் பொருளாதாரம் சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது!

504

bandula-gunawardena-890x395நாட்டின் பொருளாதாரம் தற்போது சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளதுடன் முதலீட்டாளர்கள் நாட்டை புறக்கணித்து விட்டு செல்வதாகவும் தொழில் இடங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 131 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது 142 ரூபாவாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் நிதி கையிருப்பை பாதுகாத்து கொள்ள இந்தியாவிடம் இருந்து பில்லியன் கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனா இலங்கையில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதன் சாதகத்தை தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்காததால் ஏற்றுமதி பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.