சாலையை மெதுவாக கடந்த நபர்கள்: ஆத்திரத்தில் கத்தியால் சராமரியாக தாக்கிய பொலிசார்!!

566

6492686-Blood-covered-knife-still-dripping-in-the-hands-of-a-murderer-with-blood-spatter-on-the-brick-wall--Stock-Photoஜேர்மனி நாட்டில் சாலையை மெதுவாக கடந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த 2 நபர்களை பெர்லின் பொலிசார் சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள Neukolln என்ற பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 19 மற்றும் 24 வயதுடைய 2 நபர்கள் ஜேர்மனி நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 3:45 மணியளவில் Neukolln பகுதியில் உள்ள சாலை ஒன்றில் இருவரும் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, அதே சாலையில் 29 வயதான விடுப்பில் இருந்த பெர்லின் பொலிசார் ஒருவர் காரில் வந்துள்ளார்.கார் சாலையில் வந்தபோது, 2 நபர்களும் சாலையை கடந்ததாக தெரிகிறது. ஆனால், பொலிசாரின் கார் நின்றுக்கொண்டு இருந்தபோது இருவரும் மெதுவாக சாலையை கடந்ததால் அந்த பொலிசார் ஆத்திரம் அடைந்துள்ளார்.

காரை விட்டு இறங்கிய அவர், இருவரை நோக்கி வேகமாக சென்று தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் பொலிசார் வைத்திருந்த கத்தி ஒன்று 24 வயதான நபரின் பின்புறத்தை பலமாக தாக்கியுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், காயத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தனது தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமாக விசாரணை நடைபெற்ற நிலையில், காரில் சென்றுக்கொண்டுருந்த தன்னை இரண்டு பேரும் கத்தியால் தாக்க வந்ததால் தான் தன்னுடைய தற்காப்பிற்காக அவர்களை தாக்கியதாக அந்த பொலிசார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொலிசாரின் கையிலும் கத்தியால் தாக்கப்பட்ட காயம் இருந்ததாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.