விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைக்க அதிகார சபை ஒன்றை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச் சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கம் என்பது எமது நாட்டை பொறுத்தவரை கனவாகவே அமைந்துள்ளதாகவும் அதனை நனவாக்குவதற்கும் பிரதேச கிராம ரீதியிலான செயற்றிட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைக்கவும் தேசிய ரீதியிலான சட்டதிட்டங்களை உரிய முறையில் பின்பற்றவும் எதிர்வரும் காலங்களில் அதிகார சபை ஒன்றை ஸ்தாபிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபுறம் விளையாட்டுத் துறை சார்ந்த குழுக்களின் அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்றுக்கும் செல்லவுள்ளோம்.
ஒலிம்பிக் பதக்கம் என்பது இலங்கையை பொறுத்தவரை கனவாகவே காணப்படுகின்றது அந்தவகையில் அந்தக் கனவை நனவாக்கும் முகமாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவருடன் நாம் பல்வேறு கலந்துரையாடல்களையும் முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் விளையாட்டுத்துறை சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதோடு பிர தேச கிராம மட்டங்களில் இருந்து சகலதுறைசார்ந்த விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களின் திறமை களை முன்வைப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.