நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல – கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த சிறுவன் அதிலிருந்து விழுந்து, நெஞ்சு பகுதியில் பலகை துண்டு பாய்ந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், நெஞ்சில் குத்திய பலகை அகற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.