வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கார் தீயில் எரிந்து முற்றாக சேதம்!!

478

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்கவின் கார் நேற்று (30.10.2015) தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் குறித்த காரினை அதன் சாரதி செலுத்திக் கொண்டிருந்த போது, வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது சாரதி கதவினை திறந்து வெளியில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு தண்ணீர் பவுசர்கள் வரவழைக்கப்பட்டு நீர் பாய்ச்சி தீ அணைக்கப்பட்டது. எனினும் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இத்திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கின்ற போதிலும், விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

C1 C2