காத்தான்குடி – ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (30.10) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டினுள் இருந்து வெளியில் சென்ற குழந்தை வெகு நேரம் திரும்ப வராததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தயாராது மூத்த சகோதரியின் வீட்டில் நீர் நிரம்பி இருந்த மலசல கூட குழியில் இருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அங்கு மரணமடைந்துள்ளார்.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.