மாத்தறை, திஹகொட, கபுதுவ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் பின்னர் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
திஹகொட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த 8ஆம் ஆண்டு மாணவன் தனஞ்சய பஸ்நாயக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த 20 வயது இளைஞனொருவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.