ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இணைந்து நாளைய முதல் சுற்றி வளைப்புக்களை நடாத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இழைக்கப்படுகின்ற சிரமங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.