வெல்லவாய – படகொலயாய பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது வீட்டில் சாரி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





