இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்குப்பின்பே பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்- ஜெயரட்ண!!

473

320881-slc-logo

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்­கான தலைமைப் பயிற்­சி­யாளர், இலங்கைக் கிரிக்கெட் சபைத் தேர்­த­லுக்குப் பின் நிய­மிக்­கப்­ப­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்­கால பயிற்­சி­யாள­ராக ஜெரோம் ஜெய­ரட்ண செயற்­பட்­டு­வ­ரு­கிறார்.

பாகிஸ்தான் மற்றும் இந்­திய அணி­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற தொடர் களை இலங்கை அணி இழந்­ததன் எதி­ரொ­லி­யாக தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த மாவன் அத்­த பத்து கடந்த செப்­டெம்பர் மாதம் பதவி வில­கினார்.

அவரின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வதற்கு இடைக்­கால பயிற்­சி­ய­ாள­ராக ஜெரோம் ஜெய­ரட்ண நிய­மிக்­கப்­பட்டார். அவரின் பயிற்­று­விப்பின் கீழ் இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் மோதிய 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-–0 என்ற அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

இந்­நி­லையில் நிரந்த தலைமைப் பயிற்­சி­யாளர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் தேர்­த­லுக்குப் பின்னர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது­வ­ரையில் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­விக்கு 5 விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் அறி­யக்­கி­டைக்­கின்­றது.

அதே­வேளை அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் நடை­பெ­ற­வுள்ள ஆசிய கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களுக்கு முன் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.