இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை!

641

IN11_C_V__WIGNESWA_2337718fயுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று மரம் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டில் மழை இல்லாமல்போய் விட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விட்டது. நாடு விட்டு நாடு வந்து, கடற்கரையோரங்களில் மிதக்கும் சையிரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் போய்விட்டது.

காட்டு யானைகள் அமைதியாக தங்குவதற்கும், தமக்குரிய உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்ற சூழல் இல்லாமல் போய்விட்டது. மாற்றப்பட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. போர் முடிவிற்கு வந்தபோதும், இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.

கடந்த கால தவறுகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. ஆண்டவன் படைப்பில் அனைத்து உயிர்களும், அமைதியாக வாழ்வதற்கு உரித்து உண்டு. ஆனால் மனிதர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளினால், இயற்கையின் சமநிலை பாதிப்படைகின்றது.

வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமான காபனைட்கள் சேர்ந்துள்ளதால், பூலோகம் வெப்பமாகி வருகின்றது. மரங்களை நாட்டுவதன் மூலம் காபனைட்சோய்ல் மரங்களினால் உள்வாங்கப்பட்டு, ஒட்சிசன் வாயு வெளியிடப்படுவதனால், உயிரினங்கள் சுவாசிப்பதற்கு தாராளமான வாயுக்கள் கிடைக்க வழி வகுக்கலாம், எனக் குறிப்பிட்டார்.