கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை!!

489

tour-driven-largeகொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹவளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை, வெலிக்கடை, மிரிஹான, கிரிபத்கொடை, தலங்கம மற்றும் வத்தளை ஆகிய நகரங்களில் விதிக்கு முரணான வகையில் வாகனத்தை செலுத்துதல், அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல் மற்றும் முச்சந்திகளில் வாகனங்களை முந்திச் செல்லுதல் என்பன இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் பொலிஸார் வழங்கும் அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.