
உத்தரபிரதேசத்தில் பெண்மணி ஒருவர், தனது மகனை கன்னத்தில் அறைந்த பெண்ணை கட்டிலோடு கட்டி வைத்து தீ வைத்துள்ளார்.பைஜபூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்பவரது மகளை அதே பகுதியை சேர்ந்த அம்பிகா சானி என்பவரின் மகன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புஷ்பா அந்த 8 வயது சிறுவனை கன்னத்தில் அறைந்துள்ளார்.இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துக்கு வந்த போது, அந்த பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு புஷ்பா கட்டுபடவில்லை.
இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் ஹரிகேஷ் யாதவ் உதவியுடன், நேற்று புஷ்பா படுத்திருந்த கட்டிலோடு சேர்த்து அம்பிகா கட்டிவைத்து தீ வைத்துள்ளார்.
தற்போது காயமடைந்த புஷ்பா மாவட்ட மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக அம்பிகா மற்றும் ஹரிஷ் யாதவுக்கு எதிராக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





