வவுனியா வெங்கலச் செட்டிகுளம் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பாராட்டு விழா 2015!!

1039

வெங்கலச் செட்டிகுளம் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு 2014ம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட மேற்படி நிதியத்தினால் பொதுப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களையும் அதற்கு உறுதுணையாகச் செயற்பட்ட அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றய தினம் செட்டிகுளம் மகாவித்தியாலய மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

வெங்கலச் செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் 2014ல் க.பொ.த (சா/த) பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசில்கள் மற்றும் காசோலைகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அம்மாணவர்களின் கல்விப் பெறுபேறுகளுக்காக உழைத்த பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் நினைவுப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிதியத்தின் தலைவர் திரு பி.வி.அன்ரனீற்ரோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு எல்.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராசா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.கு.சிதம்பரநாதன், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடற் பணிப்பாளர் திரு எஸ்.சண்முகநாதன் செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சு.யேசுதாசன் ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் திரு எல்.சீ.லெம்பேட் ஆகியோரும்

உதவிப் பொறியியலாளர் திரு செ.தயாளன், கரங்கொடுப்போம் செயற்றிட்ட இணைப்பாளர் திரு ஜே.ஏ.ஜே.றோய், பிரபல வர்த்தகர்களான திரு ஜி.வி.ராசதுரை, திரு வ.ஜோன்சன் திரு.அ.சுரேன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இவ் விழாவில் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6.1 6.2 7 8 9 10 11 IMG_2338 SAM_0002