பாம்புகளையே நடுங்க வைக்கும் விசித்திர கிராமம்!!

455

Plains-Garter-Snakeபாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் அப்பேர்ப்பட்ட பாம்புகளையே விளையாட்டு பொருளாக பார்க்கும் கிராமம் தான் செட்பல். கிழக்காசிய நாடுகள் பலவும் பாம்புகளை உணவுகளாக பயன்படுத்தும் வேளையில் இன்றும் பாம்புகள் மீதான பயம் மனிதர்களுக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதன் காரணமாக தான் பாம்புகளை மனிதர்கள் தெய்வமாகவும், புனிதமாகவும் கருதி வணங்க தொடங்கினான். பல்வேறு இடங்களில் பாம்புகள் தொடர்பாக வித்தியாசமான வழிபாடுகள் இருக்க தான் செய்கின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு கிராமம் தான் மத்திய பிரதேசத்தின் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்பல். இந்த கிராமத்தின் சித்தீஸ்வர் ஆலயத்தில் உள்ள தெய்வம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் பாம்பு கடி காயங்களை குணப்படுத்தும் சக்தி உடையது என்றும் கூறப்படுகிறது. பாம்பு கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே இங்கு சிவனின் மேல் ஏழு தலை நாகம் இருப்பது போன்ற சிலை பித்தளையால் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பாம்புகள் வசிப்பதற்கென்று தனியாக பரண் மேல் இடம் அமைத்துள்ளனர்.

மேலும் தங்கள் வீடுகளில் பாம்புகளில் ஓவியங்களையும் வரைந்து வைத்துள்ளனர். வீட்டில் நாம் சாப்பிட்டுகொண்டு இருந்தாலும், அருகிலேயே பாம்புகள் ஊர்ந்து செல்லும். அந்தளவுக்கு இங்குள்ள அனைத்து வீடுகளிலும் பாம்புகளின் நடமாட்டத்தை சகஜமாக பார்க்கலாம். எனினும் இந்த கிராமத்தில் பாம்பு கடித்து பலியானவர்கள் என்று யாரும் இல்லை என்பது விந்தைதான்.