வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்!!

375

1292311624829_1292311624829_rஉடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.

இரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஒக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது.

தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.

வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.