தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி நீதவான் ஶ்ரீநித் விஜேசேகரவால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த பெண்ணை 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி – பலகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 72 வயதான தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக கூறப்பட்டு பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தந்தையை அடன்பிடிய முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





