மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு!!

967

flood-batticaloa-sri-lanka-jan-2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்ந்து வரும் அடை மழை காரணமாக வீதிகள், பாடசாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.